Wednesday, June 18, 2014

அலையாய் மாறிய ஆழ் கடலே ,
கரையைக்கண்டதும்    மீண்டும் கடலில்  மாய துடிப்பது  ஏன் ,
அமைதியை தேடியோ கரையினை அடைந்தாய் , திரையும் சுமை என அறிந்தோ   மீண்டும் கடலினுள் புகுந்தாய்

மனசு

தட்டினால் திறந்திருக்கும்,
எட்டி உதைத்து விட்டாய் ,
இறுக மூடிக்கொண்டது மனது !

Enakkaga

பிறக்கும் ஒவ்வொரு கணமும்  உனக்காகவே ,
இழந்தவை  குறித்து ஏக்கங்கள் ஏன் ? 
இனி பிறக்கும் கணங்களை எண்ணியே காத்து நிற்பது ஏன் ?

சிலுவை

எல்லாம் இழந்த பின்னும்
ஏனோ ஓர்
சிலுவைக்கு ஏங்கும் மனம்

இழப்பும் இனிதே

இதுவரை இழந்தவை இனிதாகவே  தெரிகிறது ,
இருப்பதெல்லாம்  சுமையாக மாறிய போது !!

மழை

என்ன சொல்லிவிட்டேன் என்று அழுகிறது இந்த வானம்

இருள் எனக்கு மட்டுமே

விளக்கின் ஒளியில் நான் தேடி நடந்தது சூரியனை ,
விடிந்த பொழுதில் விளங்கிய உண்மை ,
இருள் எனக்கு மட்டுமே சொந்தமானது.